ஸ்ரீதரகணேசன்:

பெயர்: ஸ்ரீதர கணேசன்
பிறந்த இடம்: தூத்துக்குடி
(01.09.1954)
தொடர்புகளுக்கு:
முகவரி: 'கலைவாணி இல்லம்',
2/208, தபால் தந்தி காலனி,  13 வது தெரு,
தூத்துக்குடி –
628 001
கைத்தொலைபேசி: 
9629586668

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • உப்புவயல் - 1995
  • வாங்கல் - 2001
  • சந்தி – 2001
  • அவுரி – 2006

சிறுகதைத் தொகுப்பு:

  • மீசை – 2009

குறுநாவல்கள்:

  • விரிசல் - 2007

விருதுகள்:

  • நெருப்புக் குமிழிகள் என்னும் சிறுகதை – கேரளா தமிழ் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி
    – முதல்பரிசு –
    1980
  • உப்பு வயல் - தமிழக அரசின் பரிசு – 1996
  • உப்பு வயல் - கரூர் பத்மாவதி டிரஸ்டின் விருது - 1996
  • உப்பு வயல் - தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான விருது – 1996
  • சந்தி – திருப்பூர் கலை இலக்கியப் பேரவை நடத்திய சுதந்திர பொன்விழா நாவல் போட்டி – முதல்பரிசு – 1999
  • வாங்கல் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் விருது – 2001
  • அவுரி – தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலித் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சிறந்த தலித் நாவலுக்கான 'பாலம்' விருது – 2008
  • விரிசல் - தமிழக அரசின் 'ஆதி – திராவிடர் மற்றும் பழங்குடி நலவாழ்வுத் துறையின் சார்பாக வழங்கப்படும் சிறந்த நாவலாசிரியருக்கான விருது

இவர் பற்றி:

  • இவர் 1977 முதல் எழுதிவருகிறார். இவரது படைப்புக்கள் கணையாழி, தாமரை, செம்மலர், கவிதாசரண், கோடங்கி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.  இதுவரை 4 நாவல்கள், ஒரு குறுநாவல் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். இவரது உப்பு வயல்,  நாவல் திருச்சி பாரதிதாசன், மனோன்மணியம், நெல்லை,  தில்லி மற்றும் கேரள (திருவனந்தபுரம்) பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இணைக்கப்பட்டுள்ளது. இவர் இளம்வயதில் நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஜெயக்காந்தனின் எழுத்துக்களினால் வசீகரப்பட்டு எழுத்துலகுக்கு வந்தவர். இவர் மார்க்சீய பார்வை கொண்டவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வின் துயரங்களை தன் எழுத்தில் வடிப்பவர்.