கவிஞர் சுரதா:

பெயர்: இராசகோபால்
புனைபெயர்: சுரதா
பிறந்த இடம்: பழையனூர், திருவாரூர் (23.11.1921 – 20.06.2002)

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • தேன்மழை  - 1986
  • சுவரும் சுண்ணாம்பும் - 1974 (நடிகைகளின் அகவாழ்வு பற்றிய கவிதைநூல்)
  • அமுதும் தேனும் - 1983
  • பாரதிதாசன் பரம்பரை – 1991
  • வினாக்களும் சுரதாவின் விடைகளும்

விருதுகள்:

  • தேன்மழை – தமிழக அரசின் பரிசு – 1969
  • கலைமாமணி விருது – தமிழக அரசு – 1972
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது – 1978
  • கவியரசர் பட்டம் - 1982
  • கேரள மகாகவி குமரன் ஆசான் விருது – 1990
  • தேன்மழை என்ற நூல் - இராசராசன் விருது

இவர் பற்றி:

  • இவர் இலக்கியம், காவியம், ஊர்வலம், விண்மீன், சுரதா ஆகிய இதழ்களை நடத்தினார். இவர் தன் 24 ஆவது வயதிலேயே திரைப்பட வசனகர்த்தாவாகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் விளங்கினார். பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாக சுப்புரத்தினதாசன், சுரதா என்ற புனைபெயர்களை தனக்கு சூடிக்கொண்டார். பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதப்படுபவர் இவர். இவரை உவமைக்கவிஞர் என்று அழைப்பர். இவர் மங்கையர்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலில் வசனம் எழுதினார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு பத்து இலட்சம் ரூபாப் பணம் பரிசுத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.
     
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).