கலியபெருமாள்.கா:

பெயர்: கா.கலியபெருமாள்
பிறந்த இடம்: பேராக் மாநிலம், மலேசியா
(1937)
தொடர்புகளுக்கு:
முகவரி:
40A Laluan Sungai Pari 11,
Teluk Kruin,
30100 Ipoh.

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம்

படைப்புகளில் சில:

  • தமிழர் திருமண முறைகள்
  • நீத்தார்கடன் நெறி முறைகள்
  • தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் (1000 பக்கங்களுக்கு மேலான ஒரு தொகுப்பு நூல் இது)

விருதுகள்:

  • நல்லாசிரியர் விருது
  • மாநில சுல்தான் விருது
  • டாக்டர் பட்டம் - அமெரிக்க உலகப் பல்கலைக்கழகம்
  • தமிழ் நேசன் பவுன் பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பொற்கிழி பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை வழங்கிய கேடயப் பரிசு
  • செந்தமிழ் கலா நிலைய சுவாமி இராம தாசர் வழங்கிய கேடயப் பரிசு
  • சுவாமி கிருபானந்த வாரியார் வழங்கிய 'செந்தமிழ்ச் செம்மல்' விருது
  • சித்தியவான் திருவள்ளுவர் படிப்பகம் வழங்கிய 'செந்தமிழ் வாணர்' விருது
  • ரவூப் தமிழர் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட விருது - 'திருக்குறள் மணி'
  • சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையில், கல்வி அமைச்சரிடமிருந்து பெற்ற விருது -' தமிழ் நெறிக் காவலர்'

இவர் பற்றி:

  • இவர் 80 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மேலும் 20 கும் மேற்பட்ட சிறுகதைகள், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். நாடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். தமிழ்க்குயில் என்ற இதழை நடத்தியதன் மூலம் தமிழ்க்குயில் கா.கலியப்பெருமாள் என்றும் தமிழ்க்குயிலார் என்றும் அறியப்பட்டவர். வள்ளலாரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உழையவர். பல தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தவர்.