சரஸ்வதிஅரிகிருஷ்ணன்:

பெயர்: சரஸ்வதி அரிகிருஷ்ணன் (1942)
வசிப்பிடம்: கனடா

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல், சிறுவர் இலக்கியம், கவிதை

படைப்புகள்:

சிறுவர் மலர்கள்:

  • நிறம் மாறும் பூக்கள் - 1989

வாழ்க்கை வரலாறு:

  • நம்பிக்கை நட்சத்திரம் ஜி.பி – 1990

குறுநாவல்:

  • ஐந்தாவது பௌர்ணமி - 1993

சிறுகதைத் தொகுப்பு:

  • பனிமலர் - 1995

நாவல்கள்:

  • நானும் ஒரு தமிழ்ப் பெண்தான் - 1995
  • ஆசை கொண்ட மனம் - 1997
  • என்னுயிர் ஷhலினி - 1998

மருத்துவ நூல்:

  • நோய் தீர்க்கும் எளிய மூலிகை மருத்துவம் - 2001

விருதுகள்:

  • விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் - மலேசிய மகளிர் திலகம் விருது – 1995 
  • பணமுடிப்பும், 'முருகு' தங்கப்பதக்க விருதும் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1990
  • டாக்டர் பி.பி.நாராயணன் தங்கப் பதக்க விருது – சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1991
  • சிறுகதைச் சிற்பி, துணிச்சல் எழுத்தாளர், புரட்சி எழுத்தாளர் - என்றெல்லாம் புகழப்படுபவர்.
  • இலக்கிய மாமணிகள் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வாசவன் - 1995

இவர்பற்றி:

  • இவர் ஓய்வு பெற்ற ஒரு மருத்துவத் தாதி. இவருடன் இணைந்து இவரது கணவரும் எழுதுவார். 43 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100 க்கும் அதிகமான சமூக, இலக்கிய நாடகங்கள், 1500 க்கும் அதிகமான அரசியல், சமூக, மருத்துவ, இலக்கியக் கட்டுரைகள், 1000 க்கும் அதிகமான சிறுவர் இலக்கியங்கள் படைத்து உள்ளனர். இவருடைய புல்லுருவி, மணிமாலா போன்ற சிறுவர்களுக்கான வானொலித்தொடர்கள் பலராலும் பேசப்பட்டன.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.