சண்முகதாஸ்.அ:
(பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்)

பெயர்: அருணாசலம்.சண்முகதாஸ்
பிறந்த இடம்: திருகோணமலை
(2.1.1940)
வசிப்பிடம்: யாழ்ப்பாணம்

படைப்புக்கள்:
  • நமது தமிழ் மொழியின் இயல்புகள்
  • தமிழ் மொழி இலக்கண இயல்புகள்
  • துணை வேந்தர் வித்தி
  • இத்தி மரத்தான்
  • கிறிஸ்தவ தமிழ் இலக்கிய வளர்ச்சி
  • ஆற்றங்கரையான்
  • தமிழ் மொழியும் யப்பானிய மொழியும்
  • இலக்கண ஒப்புவமை
  • ஈழகேசரித் தமிழ்
  • தமிழின் பா வடிவங்கள்
  • பழந் தமிழர் வாழ்வியல் நிலம்

விருதுகள்:

  • தமிழின் பா வடிவங்கள் - சம்பந்தன் விருது – 2000
  • தமிழின் பா வடிவங்கள் - வடக்கு கிழக்கு மாகாண விருது
  • தமிழ்ப் பணிக்காக – வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது

இவர் பற்றி:

  • யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவுரையாளராகவும், மொழியியல் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாகவும் விளங்கியவர். தமிழ் மொழி தவிர மலையாளம், சமஸ்கிருதம், யப்பானிய மொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி உடையவர்.  சென்னை, பாரிஸ், மதுரை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், யப்பான், கனடா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மொரிசியஸ் நாடுகளில் இடம்பெற்ற கருத்தரங்குகள், செயலமர்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது பணியினைப் பாராட்டி மணி விழா கொண்டாடப்பட்டது. இவரது மனைவி கலாநிதி மனோண்மணி. தம்பதியராய் இணைந்து யாழ்ப்பாண சைவ வித்தியா விருத்திச் சங்கம் என்னும் அமைப்பில் சிறுவர் நிறை வாழ்வு இல்லக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அரும்பணி ஆற்றி வருகின்றனர்.