முருகபூபதி.லெ:

பெயர்: லெட்சுமணன் முருகபூபதி
பிறந்த இடம்: நீர்கொழும்பு, இலங்கை
(13.07.1951)
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி:

170, Hothlyn Drive, Craigieburn,
Victoria – 3064, Australia.
Tel: 61 3 9308 1484
E.mail:
 letchumanam@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுதுதல், நேர்காணல், பயணக்கட்டுரை, சிறுவர் இலக்கியம்

படைப்புக்கள்:

சிறுகதைத்தொகுதிகள்:

  • சுமையின் பங்காளிகள் - 1975
  • சமாந்தரங்கள் - 1988
  • வெளிச்சம் - 1998
  • எங்கள் தேசம் - 2000
  • கங்கை மகள் - 2005
  • நினைவுக்கோலங்கள் - 2006

நாவல்கள்:

  • பறவைகள் - 2001
  • எம்மவர் - 2003

சிறுவர் கதைகள்:

  • பாட்டி சொன்ன கதைகள் - 1997

கட்டுரைகள்:

  • நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் - 1995
  • இலக்கிய மடல் - 2001
  • மல்லிகை ஜீவா நினைவுகள் - 2001
  • அம்பி வாழ்வும் பணியும் (ஆய்வுக்கட்டுரை) – 2003
  • ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் - 2005

பயணக்கட்டுரைகள்:

  • சமதர்மப்பூங்காவில் (சோவியத் பயணக்கதை) – 1989

கடித இலக்கியம்:

  • கடிதங்கள் - 2001

நேர்காணல்கள்:

  • சந்திப்பு – 1998

பதிப்பித்த மலர், நூல்கள்:

  • நம்மவர் (மலர்)
  • உயிர்ப்பு (அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பு)
  • வானவில் (அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் கவிதைத் தொகுப்பு)

விருதுகள்:

  • இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது – சுமையின் பங்காளிகள் சிறுகதைத் தொகுதி – 1976
  • இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது – பறவைகள் நாவல் - 2002
  • சுpறந்த பிறஜைக்கான விருது – அவுஸ்திரேலிய தினமன்று (Australia Day) விக்ரோரியா மாநில டெரபின் மாநகர சபை – 2002
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விருது – அவுஸ்திரேலியா மெல்பன் தமிழ்ச்சங்கம் - 2004
  • முதல் மாணவனுக்கான விருது – நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு - 2004

 இவர் பற்றி:

  • இவரது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 இல் மல்லிகை இதழில் வெளியானது. அதே ஆண்டு முதல் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும் பணியாற்றியவர். பின்னர், வீரகேசரியின் ஒப்புநோக்காளராகவும், துணையாசிரியராகவும் பணிபுரிந்தவர். புலம்பெயர்ந்த பின்னரும் பத்திரிகைத் துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டவர். இவர் நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகர். சிலகாலம் அதன் செயலாளராகவும் செயல்ப்பட்டார். நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க ஸ்தாபகர், முன்னாள் செயலாளர். நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளராகவும் பணியாற்றியவர். இவர் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கியச் சங்கம் என்பவற்றின் ஸ்தாபக உறுப்பினர். அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா பிரதம அமைப்பாளர். இங்கு வெளியாகும் உதயம் (ஆங்கிலம், தமிழ்) இருமொழி மாத பத்திரிகையின் துணை ஆசிரியர்.