நந்தி:
(பேராசிரியர். செ. சிவஞானசுந்தரம்)

பெயர்: செ. சிவஞானசுந்தரம்
புனைபெயர்: நந்தி

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடக நூல்கள்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஊர் நம்புமா - 1966
  • கண்களுக்கு அப்பால்
  • நந்தியின் கதைகள் - 1994

சிறுவர் நூல்கள்:

  • உங்களைப் பற்றி

நாவல்கள்:

  • மலைக்கொழுந்து – 1965
  • தங்கச்சியம்மா
  • நம்பிக்கைகள்  – 1992

நாடக நூல்

  • குரங்குகள்

விருதுகள்:

  • மலைக்கொழுந்து – இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு - 1965
  • நம்பிக்கை - இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு - 1992

இவர் பற்றி:

  • ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும் உன்னதமான சிறுகதைகள் சிலவற்றைத் தந்தவருமான பேராசிரியர். செ. சிவஞானசுந்தரம் தமது கதைகளுக்கு பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.
    1995 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை அளித்து கௌரவித்தது. இவர் ஒரு சிறந்த நாடகக் கலைஞரும் ஆவார். 80 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். பொன்மணி என்ற இலங்கைத் தமிழ் சினிமாவிலும் இவர் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.