நிழற்படம் இல்லை

கவிஞர் சாரணாகையூம்:

பெயர்:என்.எஸ்.கையூம்
புனைபெயர்:சாரணாகையூம்
பிறந்த இடம்: பதுளை
(23.05.1938)

 

படைப்புக்கள்:
  • குர்ஆன் ஹதீஸ்
  • நபிகள் நாயகம்
  • கவிதை நெஞ்சம்
  • சிறுவர் பாட்டு
  • நன்னபி மாலை
  • என் நினைவில் ஒரு கவிஞர்

விருதுகள்:

  • கலாபூஷணம் விருது – 1998
  • குழந்தைக் கவிஞர், இலக்கியச் சுடர், கவிமணி, நஜ்முஸ்ஸப்ஹரா (கவித்தாரகை), நூருள் கஸீதா (கவிச்சுடர்) ஆகிய பட்டங்களும் கடைக்கப்பெற்றவர்.

இவர் பற்றி:

  • ஆரம்பத்தில் குழந்தைகளுக்காகவே கவிதை எழுத ஆரம்பித்த இவர், காலப்போக்கில் சமூகம் சார்ந்ததும், இஸ்லாமிய கருத்தியல் சார்ந்ததுமான படைப்புக்களை செய்வதில், ஆர்வம் காட்டியுள்ளார். தினகரன் 'புதன்மலலில்' தொடர்ந்தும் கவிதை எழுதி வந்த இவர், வீரகேசரியின் இஸ்லாமிய உலகம் பகுதியிலும் எழுதி தன்னை வளப்படுத்திக்கொண்டார். இதுதவிர ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, தினபதி, இன்ஸான், எழுச்சிக்குரல், நவமணி, உம்மத், தாரகை, தேசாபிமானி, தொழிலாளி அபியுக்தன், விடிவெள்ளி ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, நிதாஉல் இஸ்லாம், இஸ்லாம், இஹ்ஸான், அசனாத் ஆகிய சஞ்சிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவந்த தீபம், தமிழ் நல்வழி, ஆதவன், அம்மா, கோகுலம், முஸ்லிம் முரசு, மணி விளக்கு முதலிய சஞ்சிகைகளிலும் எழுதி உள்ளார். இவர் ஊவா மாகாண கல்வித் திணைக்களத்திற்காக சிறுவர் கவிதைகள், சிறுவர் பாட்டு, விஞ்ஞான மேதைகள், இவைகள் பேசினால்.... ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இவர் 'சிறுவர் பாரதி'என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையையும் நடத்திவந்தார்.



Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).