நகுலசிகாமணி.வல்வை ந.

பெயர்: ந. நகுலசிகாமணி
பிறந்த இடம்: வல்வெட்டித்துறை
வசிப்பிடம்: ரொரண்டோ, கனடா
தொடர்புகளுக்கு:
முகவரி:

Valvai Historical Document Conservation Centre
3947 Lawrence Ave East 413
Scarborough, Ont
M1G 1S1
Canada.

தொலைபேசி: 416 438 7650
மின்னஞ்சல்:
nagulasigamany@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் - 1997, 2006
  • உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்

மீள்பதிப்புச் செய்த நூல்கள்:

  • கைலாயமாலை – முத்துராச கவிராசர் - 1915
  • யாழ்ப்பாண வைபவ கௌமுதி – கல்லடி க. வேலுப்பிள்ளை – 1918
  • யாழ்ப்பாண வைபவ மாலை – மாதகல் மயில்வாகனப் புலவர் - 1984
  • பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் சரித்திரம் - 100 ஆவது பிறந்த தினம் - (தமிழிலும், ஆங்கிலத்திலும்) 1954
  • அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரமும் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்திலிங்கப்பிள்ளை இயற்றிய உரை – 1912 - இரண்டாம் பதிப்பு
  • கந்தவனநாதர் நான்மணிமாலையும் பதிகமும் திருப்பள்ளி எழுச்சியும் - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - மலேசிய முதற்பதிப்பு – 1928
  • தொண்டைமானாறும் செல்வச் சந்நிதியும் - செ. நாகலிங்கம் - 1974
  • நவரத்தினசாமி நீச்சல் வீரனின் வாழ்வுச் சரித்திரம் - காவலூர் கவிஞர் ஜி.எம். செல்வராஜ்
  • அனைத்துலக நீதிச் சபை ஜெனிவா முன் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய தந்தை செல்வா T.U.L.F.சார்பில் சமர்ப்பித்த அறிக்கை – 1973
  • S.J.V.CHELVANAYAKAM a tribute -   அருள் எம். ராஜேந்திரன் - 1978
  • RE – OPENING OF NORTH – CEYLON PORT – 1938, 1951-    அன்னபூரணி கப்பலை அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற வரலாறு.

இவர் பற்றி:

  • இவர் வல்வை சனசமூக நிலையத்தில் சேவை புரிந்து பல பதவிகள் வகித்தவர். 1981 இல் மதுரையில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டவர். இவரும் இவரது மனைவியும் கனடா, வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் ஒன்றை அமைத்து, அதனூடாக யாழ் நூல் நிலையத்தில் தீயினால் கருகிய நூல்களின் பிரதிகளை தேடி எடுத்து மீள்பதிப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2005 இல் வல்வையிலும், 2007 இல் இலண்டனிலும் தமது வரலாற்றுக் கண்காட்சியை நடத்தியிருந்தனர். வல்வையில் நிரந்தரமான வலவை வரலாற்றுக் கூடமொன்றினை அமைப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.