படித்ததில் பிடித்த பாட்டு வரிகள்
ஞாபகம்
ந.சிவநேசன்

மரமாக இருந்தபோது
அசைந்தாடிய
ஞாபகமாய்
இருக்கக்கூடும்
மழை பெய்யும் பொழுதுகளில்
அடித்துக்கொள்கிறது
மர ஜன்னல்!
.........................
சகுனம்
கோ.பாலமுருகன்

அப்பா
இறந்துபோன பிறகு
சகுனம் பார்ப்பதில்லை
எதிரில்
வருவோரெல்லாம்
அம்மாவாகவே
தெரிகிறார்கள்!
....................
காணிக்கை
ஏ.மூர்த்தி

உண்டியலில்
போடப்படும்
ஒற்றை
ரூபாவைய்கூடத்
தனக்கென
எடுத்துக்கொள்வதில்லை
சாமி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|