கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

தனிமனித
ரைப்போற்றும் தத்துவக் கொள்கை
இனியும் புரியாதே இன்றே - கனிவுடனே
எண்ணங்கள் யாவையும் ஏகமன தாகவே
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
மாற்றான்
மொழியில் மகேஸ்வரன் சொல்வாரா
ஆற்றல் மிகுந்த அருந்தமிழர் - தோற்றாரே
அண்டை மொழியில் இருக்கின்ற வேதத்தைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
சாதிகள்
என்கின்ற சாக்கடை வேதத்தின்
நீதியல்ல பார்ப்பனன் நன்குவாழ - பாதியில்
கொண்டுவந்து உட்புகுத்தி மண்ணையே மாற்றியதை
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
மனிதன்
அழுக்கை மனதில் மறந்தும்
இனிதாக வைத்து இருந்தால் - இனிதேனும்
புண்ணாய் நினைத்து புனிதனாய் மாறவே
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்