ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் இரா.இரவி

வரிகள்
மூன்று
சிந்தனைகள் நன்று
ஹைக்கூ
அதிகாரம்
தோற்கிறது
அன்பிடம்
கழுதை விட்டை
முன் பின் ஒன்றுதான்
அரசியல்வாதிகள்
நாய் வால் நிமிராது
நல்லோருக்கு அரசியல்
ஒத்து வராது
உப்புக்கு வரியா ?
அன்று
எத்திக்கும் வரி
இன்று
குரங்கணி காட்டில்
அனுமதி
செய்யாதீர் இனி
குரங்குச்சேட்டை
சிறகுகள் இருந்தும்
வானம் செல்வதில்லை
வாத்து
விட்டலாச்சாரியை
வென்றனர்
இன்றைய இயக்குநர்கள்
கற்பனையில்
அறிவுத்தவேண்டியுள்ளது
குப்பைத்தொட்டியில்
குப்பையைப் போட
சோழமண்டலம் சோறுடைத்து
உடைந்து நிற்குது
சோகத்தில்!
செம்புல பெயல்நீர்
போல
தான் கலந்தன
மழைநீரும் சாக்கடையும் !
மரங்கள் சாய்ந்தும்
சாயவில்லை மனம்
வழங்கினர் இளநீர்
காப்பாற்றி வருகின்றது
பலரின் உயிரை சத்தமிட்டு
அவசர ஊர்தி 108.
ஒழுக்கமாக வாழுங்கள்
படம்பிடிக்கிறது உங்களை
உங்கள் மனசாட்சி
நிவாரணமின்றி
ரணமானது
மக்கள் மனசு
உணர்த்தியது
மனிதனைவிட உயர்ந்தது
இயற்கை
ஏழைகளை
கசக்கிப் பிழிந்தது
கசாப்புயல்
கட்டுப்படுத்த
முடியவில்லை
காற்றின் சினம்
கடும்புயல்
பனையை மட்டுமல்ல
தேக்கு சவுக்கையும் சாய்த்தது
கோரப்புயல்
சொல்லில் அடங்காத
சோகம் தந்தது
கசாப்புயல்
காற்றுள்ளபோதே தூற்று
என்றனர்
காற்றையே தூற்றும்படியானது
கொடூரப்புயல்

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|