கனடாவின் பொங்கல்!
அருட்கவி ஞானகணேசன்

பல்லவி
என்னப்பா
பொங்கலிது என்னென்னமோ போலிருக்கு
புன்னகையே பிறக்குதப்பா பொங்கலென்று இதையழைக்க!
அனுபல்லவி
வெளிநாட்டு
வாழ்க்கையிலே வேடிக்கை
இதுவப்பா களியாட்ட மில்லாத கண்டறியாப் பொங்கலப்பா!
சரணம்
பட்டாசுச் சத்தமில்லை
பனம்குருத்தும் கட்டவில்லை
எட்டிவாழும் இனசனங்கள் எவரும் மொன்றுகூடவில்லை
வட்டப்பானை வாங்கவில்லை வாழைக்குலையும் புகைக்கவில்லை
பட்டுப்புடவை யேதுமிங்கு பாவையரில் மிளிரவில்லை
முற்ற்ம் பெருக்கவில்லை மெழுகிக்கோல மிடவுமில்லை
பற்றுடனே கதிரெடுத்துப் பாவையரோ குத்தவில்லை
முற்றிய தேங்காயோ மஞ்சளிஞ்சி எதுவுமில்லை
சற்கரையில் பொங்கிவிட்டால் சந்தோசம் பொங்கிடுமோ?
பட்டி பெருகவில்லை பட்டிப்பொங்கல் காணவில்லை
முட்டி உடைத்தற்போட்டி முசுப்பாத்தி ஏதுமில்லை
கட்டுடற் காளையரின் களியாட்டம் வேறுமில்லை
வெட்டவெளி அரங்கினிலே விளையாட்டும் ஏதுமில்லை

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|