லிமரைக்குகள்
முனைவர் வே. புகழேந்தி, பெங்களூர்

புதுப்பானையில்
பொங்குவதை பொங்கலன்று
காணாவிடில் நீ தமிழனே அல்ல.
உன் கண்களும் கண்களன்று.
தை பிறந்தால் வழிபிறக்கும்
தங்கத்தமிழா! தானே வரும் விடியல்
கலைந்தால் நீ உறக்கம்.
ஆண்டுக்கொரு
நாளாகிலும் வேட்டி
அணிந்து வலம் வருவோம் நாம்
தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டி.
தமிழன் அடையாளங்களில்
ஒன்று
தவறாமல் சனவரி ஆறாம் நாளன்று
திரள்வோம் அணிந்து வேட்டியொன்று
என் வீட்டு நாட்காட்டி
எழிலாய் நினைவூட்டும் வருடம் ஒருமுறை
எல்லோரும் கட்டிட வேட்டி
முற்றும் துறந்த முனிவர்
காண நேரிடின் கன்னியர் மேனியை
காம மழையில் நனைவர்.
பெற்றோரை முதியோர்
இல்லம்
சேர்த்தால் தவறாமல் அவர் நினைவு
தினம் உன்னைக் கொல்லும்.
நவ மாதத்தில் சிசு
வேண்டுமெனில் கூடல் ஒன்றே போதாது
மனைவியிடம் மனந்திறந்து பேசு.
அடைந்திடும் வெட்கமும்
தஞ்சம்
அர்த்த ராத்திரியில் காமத்தின் உச்சம்
அடைக்கலம் அளித்திடும் மஞ்சம்.
மயில் இறகுகளின்
புக்ககம்
வேறு எங்கும் இல்லை, அது
நாம் வாசிக்கும் புத்தகம்.
மழை பொய்த்திடின்
தூக்கு
என்னும் உணர்வுப்பூர்வ முடிவினை
உழவனே! மனதிலிருந்து நீக்கு.
என்னென்னவோ எழுதி
விட்டு
அவைத்தான் ஹைக்கூ என்று எண்ணி
மகிழ்கிறோம் முகநூலில் பதிவிட்டு.
அகிலன்,
ஜெயகாந்தனுக்கு மணிமகுடம்
சூட்டுவோம் தமிழ் இலக்கியத்தில் பெற்று
நாம் மற்றொரு ஞானபீடம்.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|