ஹைக்கூ
கவிஞர் நாகை ஆசைத்தம்பி,
கோவை

வறண்ட குளங்கள்
நிரம்பி வழிகின்றது
நெகிழிப் பைகள்
சுருங்கிய நீர்நிலைகள்
விரிவடைகிறது
அடுக்குமாடி குடியிருப்பாய்
நிறை குடம் தளும்புகிறது
தடைப்போட முடியவில்லை
இடையாட்டும் பெண்
தண்ணீரை கண்ட சந்தோஷம்
இசைக் கச்சேரி நடத்துகிறது
தவளைகள்
ஆடிக்காற்றில்
பறக்காமல் கிடக்கிறது
அம்மி
அழித்துக்கொண்டே வந்தாலும்
முளைத்துக்கொண்டே வருகிறது
போராட்டம்
கண்ணீர் வடித்து
கவலை போக்கியது
வானம்
யாகம் செய்து பெற்றோம்
தியாகம் செய்ய முடியவில்லை தலைக்குமேலே குடை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|