கோவலர்வாய் வைத்த குழல்
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
(சாதுக்ககளின் ஆசானாம் சாத்சாத் பரந்தாமன்
ஓதுகின்ற வேதம் குழல்!)

நாவசைந்தால்
நாதமழை நம்பிநாற்கு வேதமழை
பூவதுவாய்ப் புன்னகைக்கும் பூவையரின்--தேவதேவன்
பாவமதைப் போக்குதற்குப் பண்ணிசைத்கும் நாதவேதம்
கோவலர்வாய் வைத்த குழல்!
கொஞ்சிக் குரல்கொடுத்துக் கோபியரைக் கூப்பிடுவார்
தஞ்சமென வந்தவரை தாயெனவே – கொஞ்சிடுவார்
ஆவலுடன் அண்டினாற்கு ஆனந்தம் தந்திடுமே
கோவலர்வாய் வைத்த குழல்!
பஞ்சி பறந்தோடும் பாவங்கள் சேர்ந்தோடும்
கொஞ்சும் குயிலெனவே கூடிவரும்--வஞ்சியர்கள்
ஆவலுடன் ஓடிவர ஆவினத்தை ஆதரிக்கும்
கோவலர்வாய் வைத்த குழல்!
புல்லாங் குழலென்பர் பூங்குழலின் நாதமென்பர்
ஏல்லோற்கும் இன்பம் இணையிலாச்-சல்லாபம்
கோபாலன் கோமகிழக் கொட்டும் இசைமுளங்கும்
கோவலன்வாய் வைத்த குழல்!
அண்டம் அதில்மயங்கி ஆனந்தம் பொங்கியௌ
திண்திறல் கண்ணனின் தேன்குழல்---பண்பாட
கோவினமும் கோதையரும் கண்ணயர்நது தூங்கவைத்த
கோவலன்வாய் வைத்த குழல்!
குழலோசைக் கண்ணனுடன் கூடிவரும் ராதையவள்
ஆழகான கண்ணனுக்கு அன்புப்---பழமன்றோ
கோவியர்கள் கொஞ்சுகின்ற கோவர்த்தன் ஞானகீதம்
கோவலன்வாய் வைத்த குழல்! ;
பாம்பையும் ஆடவைக்கும்; புல்லாங் குழலோசை
தேம்பி அழவகைகும் தேவரையும்---கூம்பியே
கோவியரை காதலிலே கட்டிவைத்துக் கண்சிமிட்டும்
கோவலன்வாய் வைத்த குழல்!
குழல்கேட்டுப் பால்சுரக்கும் கோவினம் அங்கே
அழகாக ஓடிவந்து அன்பாய்த்--தொழுதுநிற்கும்
கோவர்த்தன் இன்னிசை கேட்டே இரைமீட்கும்
கோவலன்வாய் வைத்த குழல்!

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்