பழநிவேலு.ந:

பிறந்த இடம்: தமிழகம்
வசிப்பிடம்: சிங்கப்பூர்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • கவிதை மலர்கள்
  • கலியின் நலிவு – கவிதை நாடகம்
  • பாப்பா பாடல்கள் - சிறுவர் பாடல்கள்

சிறுகதைத் தொகுப்பு:

  • காதற்கிளியும் தியாகக் குயிலும்
  • கவிஞர் ந.பழநிவேலு படைப்புக் களஞ்சியம் - தொகுதி 1, 2

விருதுகள்:

  • கலாச்சாரப் பதக்கம் - சிங்கப்பூர் சமூக வளர்ச்சித் துணையமைச்சு – கலை, இலக்கியத் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக 1987 இல் வழங்கியது.
  • நாடக சிகாமணி என்னும் பட்டம் - சிங்கப்பூர் பாஸ்கர் நாட்டியப் பள்ளி – 1978
  • கலாரத்னா விருது – சிங்கப்பூர், இந்திய நுண்கலைக்கழகம் - 1987
  • தமிழவேள் இலக்கிய விருது – சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் - 1997

இவர் பற்றி:

  • இவர் 1930 களில் சிங்கப்பூரில் குடியேரியவர். 1935 இல் எழுத்துலகில் பிரவேசித்தார். 1935 – 1960 வரையான காலப்பகுதியில் சுமார் 50 சிறுகதைகள் எழுதியுள்ளார்.